நமது பகுதிகளில் மக்கள் ஒன்றாக சேர்ந்து யோகா செய்ய தயாராக கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நமது பகுதிகளில் உள்ள அரசுப் மாணவர்களின் உடல் நலத்தை மேம்படுத்த தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது .
இருந்தால் முறையான யோகா பயிற்சி வழங்கி வருகிறோம்.
யோகா தொடர்பான அரை நாள் மற்றும் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் பெண்களுக்காகவும் ஆண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தனித்தனியே நடைபெற்று வருகிறது.
யோகா வகுப்பில் குறிப்பாக யோக ஆசனங்கள் அதை முறையாக செய்யும் வழிகள் அத்துடன் அதன் பயன்கள் தெளிவாக கூறப்பட்டு செய்விக்கப்படுகிறது.
முறையான வழிகாட்டுதலுடன் இருந்து அவரவர்கள் உடலுக்கு மிக முக்கியமான சுவாசப் பயிற்சி களுக்கான பிராணயாம பயிற்சி தகுந்தாற்போல் கற்றுத் தரப்படுகிறது.
மக்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் உடல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் யோக முத்திரைகள் முறையாக கற்றுத் தரப்பட்டு பயிற்சி விக்கப்படுகிறோம்.
நோயற்று வாழ என்றும் ஆரோக்கியமாக வாழ சுறுசுறுப்பாக இருக்க உலகம் எங்கிலும் இந்த யோகாவை அனைவரும் செய்து பயனடைந்து வருகிறார்கள் அதனால் அவசியம் நீங்களும் உங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கும் இந்த முறையான யோக பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
கீதாபஜன் அறக்கட்டளையின் பத்துக்கு மேற்பட்டோர் முறையான அரசாங்க அனுமதியுடன் எம் எஸ் சி யோகா பி ஜி டிப்ளமோ யோகா எம் எஸ் சி யோகா தெரபிஸ்ட் படித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.