கீதாபஜன்

சிகரம் தொடு

சிகரம் தொடு குழந்தைகள் நிகழ்ச்சி

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை நல்ல பண்புள்ள குழந்தைகளாக வளர்த்துவது மிகவும் கடினமான காரியமாக ஆகிவிட்டது.தொலைக்காட்சி கைப்பேசி என தொலைந்து போன கலாச்சாரமாக மாறிவிட்டது. எனவே நமது குழந்தைகளை பெற்றோர்களை மதிக்கக்கூடிய நல்ல உயர்ந்த குணம் உள்ளவர்களாகவும் சுற்றத்தாருக்கு சேவை செய்யக்கூடிய பண்புள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவராகவும் தன்னம்பிக்கை உள்ளவராகவும் மாற்றுவதற்கு கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக இவ்வாறு சிகரம் தொடு என்று நிகழ்ச்சி மாதம் தோறும் நடத்தி வருகிறோம்.

கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பள்ளி செல்லும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மேடையில் பற்பல மிக முக்கிய பாடல்கள் மந்திரங்கள் தனித்தனியாக மைக்கில் கூற செய்து குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி அடைய செய்யும் நிகழ்ச்சி .

குழந்தைகளுக்கு முன்கூட்டியே ஒரு பாடல் அல்லது மந்திரம் அல்லது செயல் வழங்குகிறோம் அதன் வரிகளும் ஆடியோவும் அனுப்பி பதிவு செய்து கொள்கிறோம் பெற்றோர்கள் அவர்களை தயார் படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்கின்றார்கள் அந்தப் பாடல் ஆனது திருப்பாவை போன்ற திவ்ய பிரபந்த பாடல்கள் 108 வழக்குகிறோம். அல்லது திருக்குறள் ஐந்து, பாரதியார் பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத்கீதை மந்திரங்கள், தேவாரம் ,திருவாசகம் பாடல்கள் மேலும் யோகா சேமிப்பது பஜனை செய்விப்பது கடவுள் ஞானிகள் தேசத் தலைவர்கள் வேடம் அணிந்து வரச் செய்வது தேசபக்தி தெய்வ பக்தி தலைப்புகளில் பேச வைப்பது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு முன்கூட்டிய வழங்கி மேடையில் சிறப்பாக குழந்தைகளை கூறச் செய்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இதற்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளுக்கு சான்றுதழுடன் சிறப்பு பரிசு வழங்கி வருகிறோம் .

மாதாமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் வருடத்தில் ஒருமுறை கலந்து கொள்ளும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறோம்.

தங்கள் குழந்தைகளையும் இது போன்ற மேடை நிகழ்ச்சி தனித்திறமைகளை வெளிப்படுத்துமாறு கலந்து கொள்ள குழந்தைகள் பெயர் ,பெற்றோர் பெயர் ,தொலைபேசி எண், ஊர் ,வகுப்பு போன்ற விவரங்களை கீழே உள்ள கீதாபஜன் Wattapp எண்ணுக்கு அனுப்பவும்.

இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ளும் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தங்கள் குழந்தைகளையும் இது போன்ற ஆளுமை வளர்ச்சி அடையக்கூடிய நினைவாற்றல் அதிகரிக்க கூடிய பலம் அதிகரிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ளவையுங்கள்.

 

 

கீதாபஜன் அறக்கட்டளை ,வெள்ளலூர்  8300112434