கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பல்வேறு இடங்களில் இயற்கையின் சூழல் கருதி மரம் வளர்க்க மரக்கன்றுகள் வைத்து பராமரித்து வருகிறோம் இதுவரை பல்லாயிரத்துக்கணக்கான மரங்கள் வைத்து வளர்த்துள்ளோம் இத்துடன் மரம் வளர்க்கும் ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்த அதற்கான பிரசுரம் (நோட்டிஸ்) மூலமும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே மரங்கள் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலக வெப்பமயமானதால் அதிகரித்து வருகிறது. காலநிலை மாறி குளிர் வெப்பம் மலை வெவ்வேறு காலங்களில் நடைபெறுகிறது .
மண் வளம் குறைந்து கொண்டே போகிறது இவற்றையெல்லாம் சரி செய்ய ஒரே வழி மரம் வளர செய்வது தான் எனவே மரம் வளர்த்த அணைத்து பொதுமக்களையும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம்.
பொது இடங்களில் அந்தந்த அரசு அனுமதியுடன் மரங்கள் வைத்து வருகிறோம் தனியார் இடங்களிலும் மரம் வைக்க தகுந்த ஆலோசனை வழங்கி மரக்கன்றுகள் வாங்கி அவர்களுக்கு வைத்து தருகிறோம் மேலும் விவசாய நிலங்களிலும் மரங்கள் வளர்ப்பதின் மூலம் தங்கள் வருவாயை அதிகப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கி செயல்படுத்தி வருகிறோம்.
நமது தொடர்பில் உள்ள அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் வழக்கத்தை வலியுறுத்தி வருகிறோம் அதற்கான ஒத்துழைப்பையும் செய்து வருகிறோம்.
தங்கள் தொடர்பில் எங்காவது மரம் வைக்க வேண்டும் என்றால் கீதாபஜன் அறக்கட்டளை தொடர்பு கொள்ளலாம் மரக்கன்றுகள் தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம்.
விரைவில் மிகப்பெரிய மர நாற்று நர்சரி கீதா பஜன் அறக்கட்டளை சார்பாக அமைக்க உள்ளோம். அதன் மூலம் எல்லா தரப்பு மக்களுக்கும் இலவசமாக மரக்கன்று வழங்க திட்டமைத்துள்ளோம்.
இந்த அற்புதமான இயற்கையை பாதுகாக்கும் உன்னத சேவையில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் மரக்கன்று வாங்கி வழங்குவதற்கு தங்கள் நன்கொடையை வழங்கலாம் அல்லது மரம் வைக்கும் வேலைகளில் ஈடுபட்டு உங்கள் உடல் உழைப்பை வழங்கலாம்.
இதுவே சரியான தருணம் உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிர்களையும் காக்க ஒரே வழி அதிக மரங்களில் லட்சக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மரங்களை வளர்ப்பது மட்டுமே எனவே அனைவரும் ஒன்றிணைந்து மரங்கள் வளர்ப்போம்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.