மாணவர்களுக்கான ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் உடல் வலிமை மற்றும் மன வலிமையை அதிகரிக்க யோகா, விளையாட்டுகள், கதைகள், சம்பவங்கள் பஜனை பயிற்சி, இசை பயிற்சி, நிறைவாற்றல் விளையாட்டு, தலைமை பண்பு பயிற்சி, நேரம் தவறாமல் பயிற்சி ,பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி, தன்னம்பிக்கை காண பயிற்சி, நினைவுத்திறன் பயிற்சி, அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள், பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி, பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி,மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம்.
இந்த முகாமில் சிறப்பான பாரம்பரிய மதிய உணவு வழங்கப்படுகிறது. காலை மாலை இடைவேளை நேரங்களில் டீ காபி தவிர்த்து கம்பங்கூழ், கஞ்சி, பழச்சாறு மற்றும் மோர் போன்ற ஆரோக்கியப் பானங்கள் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் நிறைவில் மாணவர்களுக்கு நல்ல பண்பை வளர்த்தக்கூடிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
10 வயது முதல் 17 வயது ( 5 வகுப்பு 12 வகுப்பு) வரை உள்ள மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோரை பங்கேற்கச் செய்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4:30 மணி வரை இந்த பண்பு பயிற்சி முகாம் ஆனது நடைபெற்று வருகிறது.
தங்கள் குழந்தைகள் இந்த பண்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இப்போதே நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு எஸ் எம் எஸ் அல்லது வாட்ஸ் அப் அனுப்ப வேண்டிய எண் 8300112434.
பொதுவாக நாம் எப்பொழுதும் அடுத்த சந்ததியினர் நல்ல பண்புடன் இல்லாமல் இருப்பது குறித்து வருந்துகிறோம். புலம்புகிறோம் மொபைல் போனில் தொலைக்காட்சியில் உள்ள குழந்தைகளை மீட்க இவ்வாறு பண்பு பயிற்சி முகாம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை நல்வழிப்படுத்தி வருகிறோம். அதனால் இந்த பயிற்சி முகாம் சிறப்பாக நடக்க ஊக்குவித்து இதற்காகும் செலவுகளில் தங்கள் நன்கொடைகளை வழங்கி இந்த சேவையில் நீங்களும் பங்கு எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம் .