கீதாபஜன்

மாணவர்களுக்கு உதவித்தொகை

கீதாபஜன் கல்வி ஊக்க தொகை

கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழ்மையில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக வருடம் இரண்டு முறை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம் .

பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான சிறிய ஆய்வு செய்து மேடையில் அவர்களை கௌரவித்து சான்றிதழுடன் ஊக்க தொகை வழங்கி வருகிறோம்.

இந்த கல்வி ஊக்கத்தொகை பெற இரண்டு நிபந்தனைகள் வைத்துள்ளோம்.

  1. ஆன்மீக சிந்தனை, பக்தி, பஜனை ,யோகா ,சேவை ,கலாச்சார வகுப்புகள், நிகழ்ச்சிகள், இசைப் பயிற்சி, மரம் நடுதல் ,சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டதில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் கலந்து உள்ள குழந்தைகளாக இருக்க வேண்டும் .
  2. இந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற வேண்டும் .

கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் இந்த பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வருடத்தில் இரண்டு முறை வழங்கப்படுகிறது .இது கிராமப்புற மாணவர்களுக்கும் விவசாய குடும்ப மாணவர்களுக்கும் கூலி வேலைக்கு செல்லக்கூடிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் சென்றடைகிறது.

அதனால் இவ்வாறு ஏழை குடும்பங்களுக்கு கல்வியை மேம்படுத்தும் ஊத்தத்தொகை வழங்க தாங்களும் முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஒரு குழந்தையின் கல்வித் தொகையை யாவது எடுத்துக் கொண்டால் ஊக்கமும் உற்சாகமும் பெற்று நல்ல பண்புடன் கல்வியில் கற்றுக் கொள்வார்கள் .

இந்த சேவை செய்யக்கூடிய அன்பர்களின் குடும்பத்தாரும் அவர்களின் குழந்தைகளும் மிக சிறப்பாக மேன்மையுற்று உயர்வுடன் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ்வார்கள் .