மாணவர்களுக்கான ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் உடல் வலிமை மற்றும் மன வலிமையை அதிகரிக்க யோகா, விளையாட்டுகள், கதைகள், சம்பவங்கள் பஜனை பயிற்சி, இசை பயிற்சி, நிறைவாற்றல் விளையாட்டு, தலைமை பண்பு பயிற்சி, நேரம் தவறாமல் பயிற்சி , பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி, தன்னம்பிக்கை காண பயிற்சி, நினைவுத்திறன் பயிற்சி, அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள், பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி, பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி,மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம்.
இந்த முகாமில் சிறப்பான பாரம்பரிய மதிய உணவு வழங்கப்படுகிறது. காலை மாலை இடைவேளை நேரங்களில் டீ காபி தவிர்த்து கம்பங்கூழ், கஞ்சி, பழச்சாறு மற்றும் மோர் போன்ற ஆரோக்கியப் பானங்கள் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் நிறைவில் மாணவர்களுக்கு நல்ல பண்பை வளர்த்தக்கூடிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
10 வயது முதல் 17 வயது ( 5 வகுப்பு 12 வகுப்பு) வரை உள்ள மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோரை பங்கேற்கச் செய்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4:30 மணி வரை இந்த பண்பு பயிற்சி முகாம் ஆனது நடைபெற்று வருகிறது.
தங்கள் குழந்தைகள் இந்த பண்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இப்போதே நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு எஸ் எம் எஸ் அல்லது வாட்ஸ் அப் அனுப்ப வேண்டிய எண் 8300112434.
பொதுவாக நாம் எப்பொழுதும் அடுத்த சந்ததியினர் நல்ல பண்புடன் இல்லாமல் இருப்பது குறித்து வருந்துகிறோம். புலம்புகிறோம் மொபைல் போனில் தொலைக்காட்சியில் உள்ள குழந்தைகளை மீட்க இவ்வாறு பண்பு பயிற்சி முகாம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை நல்வழிப்படுத்தி வருகிறோம். அதனால் இந்த பயிற்சி முகாம் சிறப்பாக நடக்க ஊக்குவித்து இதற்காகும் செலவுகளில் தங்கள் நன்கொடைகளை வழங்கி இந்த சேவையில் நீங்களும் பங்கு எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம் .
மாதந்தோறும் கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக ஏழை குடும்பங்களுக்கு ரூ.1000 மதிப்பில் ஒரு மாதத்திற்கு தேவையான 30 அத்தியாவசிய மளிகை பொருட்களை இலவசமாக அவர்களின் இல்லத்திற்கு சென்று வழங்கி வருகிறோம்.
நமது சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் ஏழ்மை விவசாயிகள் தந்தை இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள். கடனில் தத்தளித்து வாழ வழி இல்லாமல் சிரமப்படும் குடும்பங்கள் போன்ற ஏழை குடும்பங்கள் கண்டறிந்து 20 குடும்பங்களுக்கு இந்த மளிகை பொருட்கள் மாதம்தோறும் இலவசமாக வழங்கி வருகிறோம்.
இவ்வாறு மளிகை பொருட்கள் வழங்கச் செல்லும் போது அடுத்த குடும்பத்திற்கு மருத்துவ தேவைக்கு நம்மால் உதவ முடிகிறது. மேலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
மாதம் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அற்புத சேவையில் நீங்களும் பங்கு கொண்டு ஓரிரு குடும்பங்களுக்கு தங்கள் சார்பாக மளிகை பொருட்கள் வழங்க வேண்டுகிறோம்.
நமது குடும்ப அன்பர்கள் பிறந்தநாள், திருமணநாள், பெரியோர்கள் நினைவு நாள் போன்ற நாட்களுக்கு தேவையாக மளிகை பொருட்கள் ஒரிரு குடும்பங்களுக்கு வழங்கலாம்.
இந்த சேவைக்கு ஊக்கமும் உதவியும் அளித்து உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஆரோக்கியமும்,ஆனந்தமும், ஆண்ம ஞானமும், நீண்ட ஆயுளும் ,நிறைந்த செல்வமும் பெற்று நல்வாழ்வு வாழ பிரார்த்தனை செய்கின்றோம்.
மேலும் உங்கள் தொடர்பில் உள்ள உண்மையான ஏழைகள், வயதானவர்கள் ,உடல்நலம் குன்றிய ஏழைகள், ஆதரவற்றோர்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.
மக்கள் சேவையே மகேசன் சேவை…
அறம் செய்ய விரும்புவோம்…
மாணவியர்களுக்கு (Girls) – 5 வயது முதல் 13 வயது வரை (1வகுப்பு – 8 வகுப்பு )
இந்த முகாமில் உடல் வலிமை மற்றும் மன வலிமையை அதிகரிக்க …
யோகா,விளையாட்டுகள்,கதைகள், சம்பவங்கள், பஜனை பயிற்சி, இசை பயிற்சி, நினைவாற்றல் விளையாட்டு, தலைமை பண்பு பயிற்சி, நேரம் தவறாமை பயிற்சி, பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி, தன்னம்பிக்கைகான பயிற்சி, நினைவுத்திறன் பயிற்சி, அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள், பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி, பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளோம்…
(மதிய உணவுடன்)
காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
இடம் : கோவை பெரியகுயிலி ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவில்
கீதாபஜன் அறக்கட்டளை கோவை 8300112434, 9894112434, 9942649941, 9865667232
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்
மன அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி பெற வேண்டியும்.
முழு உடல் ஆரோக்கியம் பெற வேண்டியும்.
இந்த முகாமில் யோகாசனம், பிராணயாமம் (சுவாச பயிற்சி), முத்ரா பயிற்சி, மருந்தில்லா மருத்துவ சிகிச்சை, சரியான உணவுப் பழக்க வகுப்பு, பஜனை, வினாடி வினா, விளையாட்டு போன்றவை நடத்தப்படுகிறது.
இரவு நல்ல உறக்கம், சுறுசுறுப்பு, உடல் பலம், மன தெளிவு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் கிடைக்கும்
மூட்டு வலி, கை கால் வலி, சுவாசக் கோளாறு, கர்ப்பப்பை பிரச்சனை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்ற அனைத்து வியாதிகளும் பரிபூரணமாக குணம் ஆகும்
குடும்பத் தலைவியாக தாயாக இருந்து மற்றவர்களுக்காக உழைத்து தங்கள் உடலையும் மனதையும் சரியாக பராமரிக்காமல் விட்ட தாய்மார்கள் அவசியம் இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் மன மகிழ்ச்சியோடு உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால்தான் இன்னும் பல நல்ல காரியங்கள் பல காலத்திற்குச் செய்ய முடியும்.
ஆரோக்கிய பானங்கள் மற்றும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட உள்ளோம்.
கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோயில் மண்டபம், பெரியகுயிலி, கோவை.
கீதாபஜன் 8300112434
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை நல்ல பண்புள்ள குழந்தைகளாக வளர்த்துவது மிகவும் கடினமான காரியமாக ஆகிவிட்டது.தொலைக்காட்சி கைப்பேசி என தொலைந்து போன கலாச்சாரமாக மாறிவிட்டது. எனவே நமது குழந்தைகளை பெற்றோர்களை மதிக்கக்கூடிய நல்ல உயர்ந்த குணம் உள்ளவர்களாகவும் சுற்றத்தாருக்கு சேவை செய்யக்கூடிய பண்புள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவராகவும் தன்னம்பிக்கை உள்ளவராகவும் மாற்றுவதற்கு கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக இவ்வாறு சிகரம் தொடு என்று நிகழ்ச்சி மாதம் தோறும் நடத்தி வருகிறோம்.
கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பள்ளி செல்லும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மேடையில் பற்பல மிக முக்கிய பாடல்கள் மந்திரங்கள் தனித்தனியாக மைக்கில் கூற செய்து குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி அடைய செய்யும் நிகழ்ச்சி .
குழந்தைகளுக்கு முன்கூட்டியே ஒரு பாடல் அல்லது மந்திரம் அல்லது செயல் வழங்குகிறோம் அதன் வரிகளும் ஆடியோவும் அனுப்பி பதிவு செய்து கொள்கிறோம் பெற்றோர்கள் அவர்களை தயார் படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்கின்றார்கள் அந்தப் பாடல் ஆனது திருப்பாவை போன்ற திவ்ய பிரபந்த பாடல்கள் 108 வழக்குகிறோம். அல்லது திருக்குறள் ஐந்து, பாரதியார் பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத்கீதை மந்திரங்கள், தேவாரம் ,திருவாசகம் பாடல்கள் மேலும் யோகா சேமிப்பது பஜனை செய்விப்பது கடவுள் ஞானிகள் தேசத் தலைவர்கள் வேடம் அணிந்து வரச் செய்வது தேசபக்தி தெய்வ பக்தி தலைப்புகளில் பேச வைப்பது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு முன்கூட்டிய வழங்கி மேடையில் சிறப்பாக குழந்தைகளை கூறச் செய்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.
இதற்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளுக்கு சான்றுதழுடன் சிறப்பு பரிசு வழங்கி வருகிறோம் .
மாதாமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் வருடத்தில் ஒருமுறை கலந்து கொள்ளும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறோம்.
தங்கள் குழந்தைகளையும் இது போன்ற மேடை நிகழ்ச்சி தனித்திறமைகளை வெளிப்படுத்துமாறு கலந்து கொள்ள குழந்தைகள் பெயர் ,பெற்றோர் பெயர் ,தொலைபேசி எண், ஊர் ,வகுப்பு போன்ற விவரங்களை கீழே உள்ள கீதாபஜன் Wattapp எண்ணுக்கு அனுப்பவும்.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ளும் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகளையும் இது போன்ற ஆளுமை வளர்ச்சி அடையக்கூடிய நினைவாற்றல் அதிகரிக்க கூடிய பலம் அதிகரிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ளவையுங்கள்.
கீதாபஜன் அறக்கட்டளை ,வெள்ளலூர் 8300112434
கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழ்மையில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக வருடம் இரண்டு முறை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம் .
பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான சிறிய ஆய்வு செய்து மேடையில் அவர்களை கௌரவித்து சான்றிதழுடன் ஊக்க தொகை வழங்கி வருகிறோம்.
இந்த கல்வி ஊக்கத்தொகை பெற இரண்டு நிபந்தனைகள் வைத்துள்ளோம்.
கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் இந்த பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வருடத்தில் இரண்டு முறை வழங்கப்படுகிறது .இது கிராமப்புற மாணவர்களுக்கும் விவசாய குடும்ப மாணவர்களுக்கும் கூலி வேலைக்கு செல்லக்கூடிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் சென்றடைகிறது.
அதனால் இவ்வாறு ஏழை குடும்பங்களுக்கு கல்வியை மேம்படுத்தும் ஊத்தத்தொகை வழங்க தாங்களும் முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஒரு குழந்தையின் கல்வித் தொகையை யாவது எடுத்துக் கொண்டால் ஊக்கமும் உற்சாகமும் பெற்று நல்ல பண்புடன் கல்வியில் கற்றுக் கொள்வார்கள் .
இந்த சேவை செய்யக்கூடிய அன்பர்களின் குடும்பத்தாரும் அவர்களின் குழந்தைகளும் மிக சிறப்பாக மேன்மையுற்று உயர்வுடன் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ்வார்கள் .
கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக பல்வேறு இடங்களில் இயற்கையின் சூழல் கருதி மரம் வளர்க்க மரக்கன்றுகள் வைத்து பராமரித்து வருகிறோம் இதுவரை பல்லாயிரத்துக்கணக்கான மரங்கள் வைத்து வளர்த்துள்ளோம் இத்துடன் மரம் வளர்க்கும் ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்த அதற்கான பிரசுரம் (நோட்டிஸ் )மூலமும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே மரங்கள் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலக வெப்பமயமானதால் அதிகரித்து வருகிறது. காலநிலை மாறி குளிர் வெப்பம் மலை வெவ்வேறு காலங்களில் நடைபெறுகிறது .
மண் வளம் குறைந்து கொண்டே போகிறது இவற்றையெல்லாம் சரி செய்ய ஒரே வழி மரம் வளர செய்வது தான் எனவே மரம் வளர்த்த அணைத்து பொதுமக்களையும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம்.
பொது இடங்களில் அந்தந்த அரசு அனுமதியுடன் மரங்கள் வைத்து வருகிறோம் தனியார் இடங்களிலும் மரம் வைக்க தகுந்த ஆலோசனை வழங்கி மரக்கன்றுகள் வாங்கி அவர்களுக்கு வைத்து தருகிறோம் மேலும் விவசாய நிலங்களிலும் மரங்கள் வளர்ப்பதின் மூலம் தங்கள் வருவாயை அதிகப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கி செயல்படுத்தி வருகிறோம்.
நமது தொடர்பில் உள்ள அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் வழக்கத்தை வலியுறுத்தி வருகிறோம் அதற்கான ஒத்துழைப்பையும் செய்து வருகிறோம்.
தங்கள் தொடர்பில் எங்காவது மரம் வைக்க வேண்டும் என்றால் கீதாபஜன் அறக்கட்டளை தொடர்பு கொள்ளலாம் மரக்கன்றுகள் தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம்.
விரைவில் மிகப்பெரிய மர நாற்று நர்சரி கீதா பஜன் அறக்கட்டளை சார்பாக அமைக்க உள்ளோம். அதன் மூலம் எல்லா தரப்பு மக்களுக்கும் இலவசமாக மரக்கன்று வழங்க திட்டமைத்துள்ளோம்.
இந்த அற்புதமான இயற்கையை பாதுகாக்கும் உன்னத சேவையில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் மரக்கன்று வாங்கி வழங்குவதற்கு தங்கள் நன்கொடையை வழங்கலாம் அல்லது மரம் வைக்கும் வேலைகளில் ஈடுபட்டு உங்கள் உடல் உழைப்பை வழங்கலாம்.
இதுவே சரியான தருணம் உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிர்களையும் காக்க ஒரே வழி அதிக மரங்களில் லட்சக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மரங்களை வளர்ப்பது மட்டுமே எனவே அனைவரும் ஒன்றிணைந்து மரங்கள் வளர்ப்போம்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
நமது பகுதிகளில் மக்கள் ஒன்றாக சேர்ந்து யோகா செய்ய தயாராக கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நமது பகுதிகளில் உள்ள அரசுப் மாணவர்களின் உடல் நலத்தை மேம்படுத்த தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது .
இருந்தால் முறையான யோகா பயிற்சி வழங்கி வருகிறோம்.
யோகா தொடர்பான அரை நாள் மற்றும் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் பெண்களுக்காகவும் ஆண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தனித்தனியே நடைபெற்று வருகிறது.
யோகா வகுப்பில் குறிப்பாக யோக ஆசனங்கள் அதை முறையாக செய்யும் வழிகள் அத்துடன் அதன் பயன்கள் தெளிவாக கூறப்பட்டு செய்விக்கப்படுகிறது.
முறையான வழிகாட்டுதலுடன் இருந்து அவரவர்கள் உடலுக்கு மிக முக்கியமான சுவாசப் பயிற்சி களுக்கான பிராணயாம பயிற்சி தகுந்தாற்போல் கற்றுத் தரப்படுகிறது.
மக்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் உடல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் யோக முத்திரைகள் முறையாக கற்றுத் தரப்பட்டு பயிற்சி விக்கப்படுகிறோம்.
நோயற்று வாழ என்றும் ஆரோக்கியமாக வாழ சுறுசுறுப்பாக இருக்க உலகம் எங்கிலும் இந்த யோகாவை அனைவரும் செய்து பயனடைந்து வருகிறார்கள் அதனால் அவசியம் நீங்களும் உங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கும் இந்த முறையான யோக பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
கீதாபஜன் அறக்கட்டளையின் பத்துக்கு மேற்பட்டோர் முறையான அரசாங்க அனுமதியுடன் எம் எஸ் சி யோகா பி ஜி டிப்ளமோ யோகா எம் எஸ் சி யோகா தெரபிஸ்ட் படித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 முதல் 25 வயதுடைய பெண்கள் அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
யோகா, சுவாசப் பயிற்சி, தியானம், பஜனை மூலம் இவர்களின் மனம், உடல் நிலை சீராக இருக்க பயிற்சி வழங்குகிறோம். வினாடி வினா சொற்பொழிவு மூலம் நல்ல கருத்துக்கள் பெறுவார்கள். விளையாட்டுகள் மூலம் உடல் பலம் மற்றும் மன ஒருநிலைப்பாடு பெறுவார்கள்.
கலாச்சாரம் பண்பாடு பழகுவதுடன் பெற்றோர்களை மதித்தல், குடும்பத்தில் அனைவரோடும் அன்பாக இருத்தல், சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்வதன் அவசியத்தை உணர்தல், அதிகாலை எழுதலின் அவசியம் புரிதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் மண்டபம், பெரியகுயிலி, கோவை.
கீதாபஜன் 8300112434, 9894112434
A one-day character training camp for students is being conducted every month on behalf of Geethabhajan Foundation.
A delicious traditional lunch is served at this camp. Apart from tea and coffee, health drinks such as porridge, porridge, fruit juice and buttermilk are provided during the morning and evening breaks. At the end of this camp, the students are gifted with books that can develop good character.
We invite more than 100 students from 10 years to 17 years (class 5 to class 12) to participate.
This character training camp is conducted on Sundays from 8.30 am to 4.30 pm.
Book your kids now for this character training camp.
Name of the student and class should be sent via SMS or WhatsApp to 8300112434.
Generally we always regret that the next generation is not of good character. We are helping thousands of children through this character training camp to rescue the children who are crying on mobile phone and television. So this training camp is encouraged to go well and for this
We request you to participate in this service by donating towards the expenses.