கல்வி துவங்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது
🕉️ (வித்யா என்றால் “கல்வி”, ஆரம்பம் என்றால் “துவக்கம்”) நமது ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில் விஜயதசமி நாளில் நடைபெறுகிறது.
🕉️ குரு, தாய் தந்தை முன்னிலையில், நெல் மணிகள் பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து மந்திரமானது எழுதப்படுகிறது.
🕉️ குருவானவர் குழந்தையின் நாக்கில் மந்திரத்தைத் மயில் இறகு கொண்டு எழுத உள்ளார்.
🕉️ தேன் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறது, இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவார்.
🕉️ நமது குழந்தைகளுக்கு நெற்றியில் செந்தூரம், திருநாமம் இடப்பட்டு கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை அணிவிக்கப்பட்டு முறையான கல்வி மந்திரங்களான சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் மந்திரங்கள் கூறப்படும் *வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன்* தங்கள் குழந்தைகளின் பெயர், ராசி, நட்சத்திரம் கொண்டு முறையான *சங்கல்ப அர்ச்சனை* ஆஞ்சநேயர் முன்னிலையில் செய்ய உள்ளோம்.
🕉️ 1008 மூலிகை மரங்களுக்கு மத்தியிலும் நவகிரக தாக்கங்களை போக்கக்கூடிய 27 நட்சத்திர மரங்களுக்கு மத்தியிலும் கோடி நாம பிரதிஷ்டை உடன் கூடிய ஆஞ்சநேயர் பாதத்தை குழந்தைகள் தொட்டு வழிபட்டு வித்யாரம்ப பூஜை நடைபெற உள்ளது.
🕉️ நமது தொடர்பில் உள்ள அனைத்து *5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின்* பெற்றோர்களுக்கும் இந்த தகவலை தெரிவித்து கலந்து கொள்ளச் செய்யுங்கள்.