கீதாபஜன்

வியாபார அபிவிருத்தி ஹோமம்

வியாபார அபிவிருத்தி ஹோமம்

நமது *பெரிய குயிலி, ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவிலில்* 108 தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்ளக்கூடிய வியாபார அபிவிருத்தி ஹோமம் நடைபெற உள்ளது.

 

தொழில் முடக்கம், தடைகள்,  நெருக்கடிகள், எதிரிகள், கண்திருஷ்டி போன்றவற்றை நீக்கவும்,  நின்று போன வருவாயை பெறவும், பண விரையத்தை தடுக்கவும்.

 

நல்ல லாபம் ஈட்டச் செய்யவும்,  நாம் தொழிலில் செய்யும் அனைத்தும் வெற்றி பெற வேண்டியும், நிலையான தொழிலாளர்கள் அமைய வேண்டியும், மகிழ்ச்சியாக அலுவலகத்தில் குடும்பத்தில் இருக்க வேண்டியும், *தொழில் வளம் பன்மடங்கு பெருக* வேண்டியும் இந்த *தொழில் வளர்ச்சி யாகம்* நடத்தப்படுகிறது

 

அதிகாலை ஆலயத்திற்கு வந்து தொழிலகத்தின் பெயர் முதலாளி பெயர் ராசி நட்சத்திரம் பதிவு செய்து கால்களை கழுவி சுத்தம் செய்துவிட்டு தர்பை பில் ( *பவித்திரம்* ) மோதிரம் அணியப்படும்

 

தாங்கள் 27 நட்சத்திர மரத்திற்கு *நட்சத்திர விருக்ஷ பூஜை* யில் மஞ்சள் நீர் ஊற்றி, பூ அட்சதை போட்டு, ஊதுபத்தி காண்பித்து மூன்று சுற்று வளம் வந்து பூஜையை செய்ய உள்ளோம்…

 

தொழில் முதலீடு ஈர்க்க எருக்கம் மரத்தடி உள்ள *பிள்ளையார்* முன்பு  3 தலை கொட்டு 3 தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் அர்ப்பணம் செய்து பிரார்த்திக்க  உள்ளோம்.

 

கண் திருஷ்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி போன்றவற்றை சுட்டெரிக்கும் எள்ளு துணி தலையை சுற்றி நெருப்பில் போடும் *திஷ்டி பரிகாரம்* செய்ய உள்ளோம்.

 

கர்ம வினைகளை போக்கக்கூடிய  *கோ பூஜை 108  போற்றியுடன்* நாட்டு மாடு, கன்று அதற்கு அகத்திக்கீரை வழங்கி சுற்றி வந்து கோமாதாவை வழிபட உள்ளோம்

 

 நவகிரக தாக்கங்களை போக்கக்கூடிய *கோளறு பதிகம்* அனைவரும் சேர்ந்து வில்வ மரத்தடி கூறவுள்ளோம்

 

சகல செல்வங்களை வழங்கக்கூடிய *பஞ்சலோக சிவலிங்க பூஜை* தங்கள் கரங்களால் பாலாபிஷேகம் சங்கினால் செய்யப்படும்..

 

தாங்கள் ஹோமத்தில் அமர்ந்து தொழில் வளர்ச்சி அடைய முக்கிய மூல மந்திரங்களை தங்களே கூறியபடி *ஹோம திரவிய பொருட்களை அர்ப்பணம்* செய்யவும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது..

 

தங்கள் தொழில் அலுவலக மற்றும் கல்லா சாவியை வாகன சாவியை உங்கள் ஜாதகத்துடன் சேர்த்து தட்டத்தில் வைத்து ஹோமத்தில் வைத்து ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து ஆஞ்சநேயர் வழிபாடு செய்யப்படும்..

 

கம்பெனியின் பெயர் முதலாளி பெயர் ராசி நட்சத்திரம் குடும்பத்தினர் பெயர் ராசி நட்சத்திரம் வைத்து  ஆஞ்சநேயர் முன்பு *மகா சங்கல்ப அர்ச்சனை* செய்ய உள்ளோம்..

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் பாதம் தொட்டு தலையை நாம பீடத்தில் வைத்து வேண்டுதல் கூறி வழிபாடு செய்யலாம்.

 

 *துளசி, தீர்த்தம், சடாரி, செந்தூரம்* வழங்கப்படும்

 

தொழிலகத்தில் வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த வியாபார ஐம்பொன் மகாலட்சுமி காசு மற்றும் அங்கு கட்டும் எலுமிச்சை,  உடைக்க திருஷ்டி  தேங்காய்,  செல்வங்களை ஈர்க்கக் கூடிய பொருள்கள் அடங்கிய *அருள் பிரசாத கவர்* பெற்றுக் கொள்ளலாம்…

 

ஒருவர் பின்பு ஒருவர் கலந்து கொள்ளும் இந்த பூஜைக்கு மொத்தம் 1 மணி நேரம் ஆகும்

 

சிறப்பான காலை உணவு ஏற்பாடு செய்யப்படும்.

 

தொழில் முனைவோர் சரியாக 108 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

 

 *கீதாபஜன் அறக்கட்டளை*