கீதாபஜன் நிகழ்ச்சியுடன் 9, 10, 11, 12 வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு ஹயக்ரீவர் பூஜை முக்கியமான மந்திரங்களுடன் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி வருடத்தில் தேர்வுகள் துவங்குவதற்கு முன்பு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய மாணவ மாணவியர் அவசியம் தாங்கள் தேர்வு எழுதும் பேனா ஒரு பாட புத்தகம் மற்றும் (ஹால் டிக்கெட்) நுழைவு சீட்டு கொண்டு வரவும்.
குழந்தைகளுக்கு அவர்கள் பெயர், ராசி, நட்சத்திரம், தேர்வு பதிவு எண் கொண்டு அவர்களுக்கு சிறப்பு சங்கல்ப அர்ச்சனை செய்யப்படும்.
ஹயக்ரீவர் ஹோமத்தில் வைக்கப்பட்ட கயிறு கையில் கட்டி விடப்படும். தேர்வு எழுதும் போதும் அதற்காக படிக்கும் போதும் நெற்றியில் வைக்க சக்தி வாய்ந்த திருநீறு வழங்கப்படும்.
கல்வியாளர்களது வாழ்த்தும் ஆசியும் முழுமையாக கிடைக்கும்
அவசியம் நமது தொடர்பில் உள்ள 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வு மாணவர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்யுங்கள்.